ஆனந்த மயமான வாழ்வு தரும் ஹயக்ரீவர்....


ஹயக்ரீவரின் மந்திரத்தை சுவாமி தேசிகருக்கு ஸ்ரீகருடாழ்வாரே தோன்றி உபதேசித்தார் என்பது சரித்திரம். ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. பரிமுகன் என்றால் பரிந்த முகம், பரியும் முகம், பரியப் போகும் முகம் என்று மூன்று காலத்தையும் காட்டுகிறது.

ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனை வரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வ மும், பெரும்புகழும் பெற்று இன்புறுவார்க ள் என்பது ஐதீகம். ஹயக்ரீவர், அன்னையை பூஜித்து அம் பாள் வழிபாடுகள் செய்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

திருவந்திபுரம் மலை மேல் அமைந்துள் ள லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டால் செல்வம் சேரும். ஆடி பவுர்ணமியில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பார்கள். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ரகசியங்களில் மிகவும் ரகசியமானது என்று ஹயக்ரீவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய் தந்தையரின் தலையாய கடமைகளு ள் ஒன்று தங்கள் குழந்தைகளின் கல்விக் குச் சரியான வழிகாட்டுவது. எவ்வளவு தான் செலவழித்து நல்ல பள்ளியில் பயி ல்வித்தாலும், பயிலும் குழந்தைகளின் தரமும் உழைப்பும் எல்லாவற்றிற்கும் மே லாக இறைவன் அருளும் தான் அக்குழந் தை நன்றாகப் படிக்கிறதா என்பதை உறுதி செய்கிறது.

 "ஞானானந்தமயம் தேவம்
நிர்மலஸ்படிகாக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே''

இந்த பாடலுக்கு ஞானமும் ஆனந்தமயம மானவரும், தூய்மையான ஸ்படிகம் போ ன்ற தேகத்தை உடையவரும், சகல கல்வி க் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்'' என்று அர்த்தமாகும். "வெள்ளைப் பரிமுக ன்'' என்று ஸ்ரீதேசிகனால் பிரார்த்திக்கப் பட்டவர் ஸ்ரீஹயக்ரீவர்.

 



Leave a Comment