காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் தெப்பத்திருவிழா....


காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் கோயிலில் தெப்போற்ச்சவத்தின் முதல் நாளையொட்டி கோவில் குளத்தில் மூன்று சுற்றுகள் வலம் வந்து எழுந்தருளிய ஏகாம்பரநாதர்,ஏலவார்குழலி,சோமஸ் கந்தரோடு உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கோவில் நகரமான காஞ்சிபுரம் பஞ்சபூதம் ஸ்தலங்களில் ஒன்றான மண் ஸ்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஏகாம்பரநாதர் கோவிலில் குளத்தில் ஆண்டுதோறும் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். கோவிலிருந்து உற்சவர் சோமாஸ் கந்தர் மற்றும் ஏலவார்குழலி சந்நிதிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின் சிவனும், ஏலவார் குழலி தெப்பத்திற்கு எழுந்தருளி கேடயத்தில் திருக்குளத்தை வலம் வந்தனர்.

பின்னர் திருக்குளத்தில்  வண்ண விளக்குகளாலும், மலர்களாலும்  அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு, வாண வேடிக்கைகளுடன் தெப்ப குளத்தில் 3 சுற்றுகள்  வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

மேலும் இந்த தெப்பத்திருவிழாவைக்காண காஞ்சிபுரத்தில் இருந்து ஏராளமான பக்தர்களும், பொது மக்களும் வந்திருந்து கற்பூர தீபாராதனைகளை சமர்பித்து சாமி தரிசனம் செய்து தெப்பத்திருவிழாவையும்,வாண வேடிக்கையையும் கண்டு ரசித்தனர்.

தெப்பத்திருவிழாவையொட்டி திருக்கோயிலும்,திருக்குளமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக காட்சியளித்தது  குறிப்பிடத்தக்கது.



Leave a Comment