கலிங்கராஜபுரம் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவில் யானை மீது பகவான் பவனி


குமரி மாவட்டம் கலிங்கராஜபுரம் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவில் யானை மீது பகவான் எழுந்தருளும் ஊர் பவனி மேள தாளங்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டம் கலிங்கராஜபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில் திருவிழா கடந்த 22 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வரும் நிலையில் விழாவின் 9 ம் திருவிழா நாளான இன்று பகவான் யானை மீது எழுந்தருளும் ஊர் பவனி நடைபெற்றது. இந்த பவனியின் போது மூன்று யானைகள் அணிவகுத்து செல்ல அவற்றின் மீது கிருஷ்ணர், கணபதி, மஹாலட்சுமி ஆகிய தெய்வங்கள் ஏற்றப்பட்டு மேள தாளங்கள் முழங்க, பஞ்சவாத்தியம், அலங்கார ஊர்திகள், கலை அலங்காரங்கள், விளக்கு கெட்டுகள் உள்ளிட்ட கேரள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

விரிவிளையில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் தலையில் கும்ப நீரை சுமந்து ஊர்வலமாக எடுத்து வந்தனர்.யானை ஊர் பவனி சென்ற இடங்களில் எல்லாம் பக்தர்கள் வீடுகளில் முன்பு பூஜைகள் வைத்து பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர்.தொடர்ந்து பக்தர்கள் தலைமீது சுமந்து எடுத்து வந்த கும்ப நீரை கொண்டு கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தெய்வ தரிசனம் பெற்று சென்றனர்.



Leave a Comment