மீன ராசிக்கு பிப்ரவரி மாதம் பணவரத்து இருக்கும்...
மீனம்:
கிரகநிலை:
ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் புதன் - லாப ஸ்தானத்தில் சூரியன், சனி - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றம்:
04-02-2023அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2023 அன்று சூரிய பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-02-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-02-2023அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
ஆடை ஆபரணத்தையும் அலங்காரத் தையும் விரும்பும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும்.
பெண்கள் எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும்.
அரசியல் துறையினருக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்:
இந்த மாதம் புதிய பொறுப்புகள் வந்து சேரும். கிடப்பில் போட்டிருந்த வேலைகளை செய்வீர்கள். ஊதிய விஷயங்களில் நல்ல மனநிலை இருக்கும். வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரட்டாதி:
இந்த மாதம் தம்பதிகளுக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு வியாஜ்ஜியங்களில் நிலுவைகள் தொய்வு ஏற்படலாம். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.
ரேவதி:
இந்த மாதம் தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் நடப்பதற்குண்டான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும்.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Leave a Comment