மகர ராசிக்கு பிப்ரவரி மாத ராசிபலன்...


மகரம்:

கிரகநிலை:

ராசியில் சூரியன், சனி  - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்  - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் புதன் என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்:

04-02-2023அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

13-02-2023 அன்று சூரிய பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

16-02-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

21-02-2023அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:

தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உடைய மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் பணதேவை அதிகரிக்கும். வீண்செலவு. மனமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். எனினும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண்பகை போன்றவை ஏற்படலாம்  உங்களை கண்டு அடுத்தவர் பொறாமை படக்கூடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

கலைத்துறையினருக்கு நீங்கள் மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் தயங்க மாட்டீர்கள். பேச்சுத் திறமை அதிகரிக்கும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும்.  

அரசியல் துறையினருக்கு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு நீங்கள் சொல்வதை கேட்டு நடக்கவில்லையே என்ற எண்ணம் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:

இந்த மாதம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரத்தில் தட்டுப்பாடு வராது. கடன் பாக்கிகள் அடையும். பூர்வீக சொத்துகளில் உள்ள வில்லங்கம் நீங்கும். புதிய தொழில் தொடங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

திருவோணம்:

இந்த மாதம் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் வகையில் மருத்துவச் செலவுகள் குறையும். வீடு வாங்க வாய்ப்பு நிறைவேறும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை அடைவீர்கள்.

அவிட்டம் 1,2 பாதம்:

இந்த மாதம்  புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள்.

பரிகாரம்:  பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரையும், சிவனையும் வணங்க  எல்லா இடையூறும் விலகும். முற்பிறவி பாவம் நீங்கும்.

சந்திராஷ்டம தினங்கள்: 6, 7

அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

 



Leave a Comment