துலாம் ராசிக்கு பிப்ரவரி மாத ராசிபலன்...
துலாம்:
கிரகநிலை:
ராசியில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன் - சுக ஸ்தானத்தில் சூரியன், சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றம்:
04-02-2023அன்று புதன் பகவான் தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2023 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-02-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-02-2023அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எல்லோரிடமும் அனுசரித்து பேசும் குணமுடைய துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.
தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும்.
பெண்களுக்கு எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
கலைத்துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். எதிர்பார்த்த பண வரவு இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம்.
அரசியல் துறையினருக்கு பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும்.
சித்திரை 3, 4 பாதம்:
இந்த மாதம் உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும்.
சுவாதி:
இந்த மாதம் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆனால் மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது.
விசாகம் 1, 2, 3ம் பாதம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும்.
பரிகாரம்: மகாலட்சுமியை வணங்கிவர செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20, 21
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Leave a Comment