மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


திருப்பூர் கூலிபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி 5வது வார்டுக்குட்பட்ட கூலிப்பாளையத்தில் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாகாளி அம்மன் கோவில் உள்ளது  . கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா நிகழ்சிகள் மகா கணபதி ஹோமத்துடன் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது . இதை அடுத்து விநாயகர் வழிபாடு , குபேர லட்சுமி நவகிரக ஹோமம் ,  எந்திர பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .

இதனைத் தொடர்ந்து முக்கிய  நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று வேத பாராயணத்துடன் தொடங்கியது.  இதனை தொடர்ந்து மாகாளியம்மன் மற்றும் விநாயகர் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதைக்காண ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது



Leave a Comment