மூன்று ஆலயத்தில் ஒரே சமயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம்
ஆற்காடு அருகே மூன்று ஆலயத்தில் ஒரே சமயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம் விழாவில் கிராம மக்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதிக்குட்பட்ட கலவை வட்டம் திமிரி அடுத்த பழையனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரசித்திவிநாயகர் ஸ்ரீ அம்புஜவல்லி நாயகி ஸமேத ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி ஆகிய பஜனை ஆலயங்கள் என மூன்று கோவில்களில் ஆயிரம் வருடங்களுக்கு பிறகு இன்று ஒரே சமயத்தில் மூன்று கோவிலுக்கும் திருக்குடமுழுக்கு மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது
இந்த கும்பாபிஷேக விழாவிற்கு வாலாஜா தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் கயிலை ஞானகுரு முரளிதர சுவாமி வேலூர் ஸ்ரீபுரம் சக்தி நாராயண பீடம் சக்தி அம்மா ரத்தினகிரி பாலமுருகனடிமை ஆகியோர் கலந்து கொண்டு விழாவில் கலந்து கொண்டு யாகசாலையில் முதல் கால பூஜைகளை தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடந்து இன்று அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை எஜமானர்கள் சங்கல்பம் பூர்ணாஹீதி யாகம் உள்ளிட்டவை யாகசாலையில் சிறப்பு பூஜை செய்து வேத பண்டிதர் பூஜை செய்த கலசத்தை தோளில் சுமபந்தப்படி ஆலயத்தை முழுவதும் வலம் வந்து பிறகு பல்வேறு புன்னிய நதிகளிலிருந்து வரவழைக்கப்பட்ட புனித நீரை வேத மந்திரங்கள் முழங்கயவாறு பூஜைகளை செய்து கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாரதனை கட்டப்பட்டது பின்னர் புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமத்தில் இருக்கும் திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டுவாரு பக்தி பரவசமடைந்தனர்.
Leave a Comment