மேஷ ராசிக்கு பிப்ரவரி மாத ராசிபலன்...
மேஷம்:
கிரகநிலை:
ராசியில் ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் புதன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், சனி - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் குரு என கிரகநிலை இருக்கிறது.
கிரகமாற்றம்:
04-02-2023அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2023 அன்று சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-02-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
21-02-2023அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
எப்போதும் நிதானமாகக் காணப்படும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலை தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்ப பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள்.
மாணவர்களுக்கு கவனத்தை சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நண்பர்களிடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.
அரசியல் துறையினருக்கு சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
அஸ்வினி:
இந்த மாதம் கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பரணி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள்.
கார்த்திகை 1ம் பாதம்:
இந்த மாதம் உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும்.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகனை செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
Leave a Comment