தை அமாவாசை... சிறப்பு தரும் குலதெய்வ வழிபாடு


நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஆகிய தினங்கள் சிறந்தது. தை அமாவாசையில் எப்போது தர்ப்பணம் அளிக்க வேண்டும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.

தை அமாவாசை நாளில் தங்கள் வீட்டில் இறந்த முன்னோருக்கு இந்த தினத்தில் தர்ப்பணம் செய்வது நல்ல காரியமாக கருதப்படும். சூரியன், சந்திரன் ஒரே ராசியில் ஒன்றாக இணைவதை அமாவாசை திதி என்பர். ஆண்டு முழுக்க வரும் 12 அமாவாசைகளில் முன்னோரை நினைத்து தர்ப்பணம் கொடுப்பவர்களின் வீட்டில் அமைதி நிலைக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தை அமாவாசை அன்று குலதெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள். அனைத்து அமாவாசையிலும்  குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவது சிறப்பு. மேலும் பல இயங்கியல், சூட்சுமவியல், இருளியல், மறைபொருள்  ஆய்வாளர்கள் இந்த அமாவாசையை குறிப்பிட்டு சொல்கிறார்கள். எனவே இந்த அமாவாசை கண்டிப்பாக உங்கள் குலதெய்வம் கோயில் சென்று உங்கள் வழக்கப்படி வழிபாடு செய்யுங்கள். உங்களுக்கு வேண்டியதை மனதை ஒருநிலைப்படுத்தி கேட்டு பெறுங்கள்.

மறந்தும் செய்ய கூடாதவை

அமாவாசை தினங்களில் அசைவம் சாப்பிடக்கூடாது. வெங்காயம் பூண்டு ஆகிய உணவுகளையும் தவிர்க்க வேண்டும். கருப்பு எள்ளை தர்ப்பணம் செய்யும்போது கடனாக பெறக் கூடாது. நீரில் இருந்தபடியே கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதே மாதிரி கரையில் இருந்தபடியே நீரில் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தைக் கிழக்கு திசை பார்த்தபடியே கொடுக்க வேண்டும் என்பதுதான் ஐதீகம்

 



Leave a Comment