திரிபுரசுந்தரி தேவேந்திர ஈஸ்வரர் ஆலயத்தில் மஹா பிரதோஷ விழா...
ராணிப்பேட்டை பிஞ்சியில் தேவேந்திரன் மன்னரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சிவாலயமான திரிபுரசுந்தரி தேவேந்திர ஈஸ்வரர் ஆலயத்தில் மஹா பிரதோஷ விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த பிஞ்சியில் தேவேந்திரன் மன்னரால் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவாலயமான திரிபுரசுந்தரி தேவேந்திர ஈஸ்வரர் ஆலயத்தில் இன்று மஹா பிரதோஷம் விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது
இந்த பிரதோஷ விழாவில் சிவபெருமானுக்கு நேர் பார்வையாக அமைந்துள்ள நந்தி பகவான் மற்றும் பிரதோச உற்சவநாதருக்கு சிவனடியார்கள் மஞ்சள், குங்குமம், தயிர், இளநீர் தேன், பன்னீர், பால் , ஆகிய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் பூ மலர்களால் அலங்கரித்து மஹா தீபாரதனை காட்டப்பட்டது.
மேலும் பூ மாலைகளை கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை ஆலயத்தில் இருந்த திரளான பக்தர்கள் தங்கள் தோளில் சுமந்தவாறு ஆலய முழுவதும் பக்தி பாடல்களை பாடியபடி வலம் வந்து சற்குருநாதர் வாழ்க வாழ்க வாழ்கவே நமச்சிவாய வாழ்க என சிவபெருமானை மனதில் நினைத்தவாறு பெண்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் முழக்கம் விட்டனர் பிறகு ஆலயத்தின் கருவறையில் இருக்கும் தேவேந்திர ஈஸ்வரருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Leave a Comment