ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை


சேலம் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும் 1008 திருவிளக்கு பூஜை ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவிழா ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாள் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும் அதன் அடிப்படையில் இந்த ஆண்டு தை முதல் நாளில் ஸ்ரீராமலிங்க சௌடேஸ்வரி அம்மனின் திருவிழா தொடங்கியது ஐம்பதாவது பொன்விழா ஆண்டான இந்த ஆண்டில் அம்மனுக்கு பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் அலங்காரங்கள் செய்யப்பட்டன குறிப்பாக தை முதல் நாள் அன்று விக்னேஷ்வர பூஜை கோ பூஜை அஸ்வ பூஜை உள்ளிட்ட பல்வேறு விதமான ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த சக்தி அழைக்கும் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான வீர குமாரர்கள் உடலில் கத்திப்போட்டுக் கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர் தொடர்ந்து இரண்டாம் நாள் நேற்று ஸ்ரீ சாமுண்டி அழைப்பு உள்ளிட்ட சிறப்பு வைப்பவங்கள் நடைபெற்றன

இதனை தொடர்ந்து ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனின் திருவிழாவை முன்னிட்டு உலக அமைதி வேண்டியும் திருமண பாக்கியம் வேண்டியும் திருவிளக்கு பூஜை இன்று நடைபெற்றது இந்த திருவிளக்கு பூஜையில் 1008 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்டனர்.

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். எனவே திருவிளக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் சகல வித செல்வங்களும் திருமண பாக்கியம் உள்ளிட்டவை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க சுமங்கலி பெண்கள் பூக்கள் மற்றும் குங்குமத்தால் திருவிளக்கு பூஜை செய்தனர் பிறகு ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த வைபவத்தை காண அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.



Leave a Comment