பொங்கலை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி...


பொங்கலை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி.பனியையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளிப்பு.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகள் நடைபெற்று வருகின்றன.அதன் அடிப்படையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் முத்தமிழ் பண்பாட்டு பாசறை சார்பில் தமிழிசை விழா நடைபெற்றது.

இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் சத்திய ஞான மகாதேவ தேசிக பிரமாச்சாரிய சுவாமிகள்,நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த தமிழிசை விழாவில் திருவாரூர் வடிவழகி ராஜ்குமாரின் லக்ஷனா நாட்டியாலயா மாணவிகளின் நாட்டியாஞ்சலி நடைபெற்றது. இதில் ஐந்து வயது முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவிகள் இசைக்கேற்ப பரத நாட்டியமாடினர்.

அதனைத் தொடர்ந்து வீணை இசை யாழிசை உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மேலும் திருவாரூரைச் சேர்ந்த இசைக் கலைஞர்களுக்கு தமிழிசை செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்சியை பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.



Leave a Comment