காலத்தில் வரும் திதிகள்... திதிகள் பற்றிய புரிதல்...
திதி என்ற வடமொழிச் சொல்லுக்கு தமிழில் தூரம் என்று பொருள்.அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை அளவிடுவது திதியாகும் நண்பர்களே.அமாவாசை நாள் அன்று சூரியனும் சந்திரனும் 0 டிகிரியில் இருப்பார்கள். அதற்கு அடுத்த நாள் சந்திரன் சூரியனின் பார்வையிலிருந்து 12 டிகிரி விலகிச் செல்லும்.இப்படி விலகி 12 டிகிரி நிற்கும் தூரம்தான் பிரதமை.
அடுத்து பிரதமையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் துதியை.அடுத்து துதியையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் திருதியை.அடுத்து திருதியையில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் சதுர்த்தி.அடுத்து சதுர்த்தியில் இருந்து 12 டிகிரி விலகி நிற்கும் தூரம் பஞ்சமி.இப்படியாக 12 டிகிரி இடைவெளியில் அடுத்து சஷ்டி,சப்தமி,அஷ்டமி,நவமி,தசமி,ஏகாதசி,துவாதசி,திரயோதசி,சதுர்தசி என சந்திரன் சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று 15 ம் நாள் 180 டிகிரியில் ராசிச்சக்கரத்தில் சூரியனிலிருந்து ஏழாவது ராசியில் நிற்பது பௌர்ணமி ஆகும்.
இப்படி அமாவாசைக்கு அடுத்து வரும் திதிகளுக்கு வளர்பிறை திதிகள் என்று பெயர்.அடுத்து இதே சுழற்சி முறையில் பௌர்ணமியில் இருந்து அதே 12 டிகிரி இடைவெளியில் ஒவ்வொரு திதியாக சூரியனை நோக்கி நெருங்கி சென்று 15 ம் நாள் சூரியனோடு 0 டிகிரியில் நிற்பது அமாவாசை ஆகும்.
இப்படி பௌர்ணமிக்கு அடுத்து வரும் திதிகளுக்கு தேய்பிறை திதிகள் என்று பெயர். இப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நகரும் ஒவ்வொரு 12 டிகிரி நகர்வுப்புள்ளிக்கு வைத்த பெயர்களே திதிகள் நண்பர்களே.இதில் அமாவாசையிலிருந்து சந்திரன் 180 டிகிரி விலகிச்செல்லும் போது இடைப்பட்ட காலத்தில் வரும் திதிகள் வளர்பிறை திதிகள் என்றும்,பௌர்ணமி திதியிலிருந்து சந்திரன் சூரியனை நோக்கி வரும் போது இடைப்பட்ட காலத்தில் வரும் திதிகள் தேய்பிறை திதிகள் என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.
Leave a Comment