காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன காட்சி...
வாலாஜாபேட்டையில் பல ஆண்டுகள் பழமையான சிவ ஆலயமான காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜ பெருமானுக்கு பல்வேறு வகையான பழங்கள் ஆயிரம் கணக்கான லிட்டர் பால் தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகம்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே மிகவும் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் சிவாலயம் அமைந்துள்ளது ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசனம் வெகுவிமர்மையாக இந்த ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த மார்கழி மாத ஆருத்ரா மஹோத்ஸவசம் தரிசனம் விழாவானது இன்று இந்த சிவ ஆலயத்தில் நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று இரவு ஏகாதச ருத்ரா ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி முதல் நடராஜர் பெருமாளுக்கு ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம், தயிர், மஞ்சள், சந்தனம், திருநீர், இளநீர், பல்வேறு வகையான பழ வகைகள் உட்பட 108 வகையிலான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னர் நடராஜப் பெருமானுக்கு மேளம் தாளம் வழங்க சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது அதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு சிறப்பு பூ அலங்காரத்தில் நடராஜ பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் அளித்து காட்சியளித்தார் இந்த ஆருத்ரா தரிசன விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.
Leave a Comment