திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி


விண்ணுலகில் மனிதர்களால் தரிசிக்க முடியாத 107 வது திவ்ய ஸ்தலமாக விளங்கும் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயத்தில்  வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த  காவேரிப்பாக்கம் பகுதியில் குந்தாகி மகரிஷிக்கு  பெருமாள் தானே முன்வந்து நில உலகில் மனிதர்களால் தரிசிக்க முடியாத விண்ணுலகில் காட்சி அளிக்கின்ற 107-வது திவ்ய ஸ்தலமாக விளங்கும் திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு வைகுண்டத்தில் காட்சியளிப்பது போன்று இத்திருத்தளத்தில் பிரசன்ன பெருமாள் காட்சி அளிக்கிறார்.

இந்த ஆலயத்தில் நேற்று இரவு பலவண்ண மூலிகைகள் மற்றும் திரவங்களால் மூலவர் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து  அதிகாலை 3 மணி அளவில் பல்வேறு வகையான வண்ண பூக்களால் உற்சவர் பரமபத நாதர் பெருமாளுக்கு தங்க ஆபரணங்களால் போல சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு  சொர்க்கவாசல் கதவுகள் திறந்து சாமிகளுக்கு  சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் இந்த வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு திருப்பாற்கடல் பிரசன்ன பெருமாள் கோவிலுக்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment