ஆன்மீகத்தில் முக்கியத்துவம் பெற்ற சின்னங்கள்! 


 

ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற சின்னங்கள்  மற்றும் குறியீடுகளை பயன்படுத்துவதில்  உள்ள மனோதத்துவம் மற்றும் தகவல்கள்

 

திரிசூலம்:

பண்டைய காலத்திலேருந்த கடவுளர்களது  ஆயுதமாக திருசூலம் இருந்து வருகிறது. இந்து சமயத்தின்  தெய்வங்களான சிவன்,காளி,துர்க்கை ஆகிய தெய்வங்களின் கைகளில் திரிசூலம் இருக்கிறது. ஆணவம்,கன்மம், மாயை எனும் மூன்று வித இருளை நீக்கும் அடையாளமாகவும்,தீய சக்திகளை அழிக்கும் தத்துவமாகும் திரிசூலம் உள்ளது.  திரிசூலத்தில் உள்ள மூன்று கூர்மையான  பகுதிகள் ,மனித வாழ்வின் மூன்று நிலைகளான விழிப்பு,கனவு, மற்றும் தூக்கம் ஆகிய நிலைகளையும்,மனம், வாக்கு, உடல், ஆகியவற்றியும் மறை பொருளாக குறிப்பிடுகிறது .மூன்று நிலைகளிலும்  மனிதர்கள் ஒன்று பட்ட நிலையில் இருக்க வேண்டும் என்பதை சூலத்தின் வடிவம் எடுத்துக்காட்டுகிறது. கதவுகளில் அவற்றை பொருத்தி வைத்திருப்பதும் வழக்கம்.அதன் முலம் தீய சக்திகளின் தாக்கம் வீடுகளுக்குள் வராமல் காப்பதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

ஸ்ரீ சக்கரம்

 

சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமான ஓன்றாக இருக்கும் ஸ்ரீ சக்கரவழிபாடனது. காமாட்சி, துர்க்கை, ராஜராஜேஸ்வரி,லலிதாம்பிகை போன்ற தெய்வங்களுக்கு ஸ்ரீ சக்கர  பிரதிஷ்டை செய்வதும்,அதை தனிப்பட்ட முறையில்  வழிபடுவதும் வழக்கத்தில் இருக்கிறது.  சக்தி வாய்ந்த ஸ்ரீ சக்கர வழிபாட்டை தகுந்த முறைப்படி,உபதேசம் பெற்று,உரிய நியமங்களுடன் வழிபட்டு வந்தால் பல நல்ல பலன்கள் கிடைக்கும் ஆன்றோர்களுடைய நம்பிக்கையாகும்.  ஆதி சங்கரர் பல்வேறு தலங்களுக்கு சென்று அங்கு உக்கிரமாக இருக்கும் அம்பிகையின் மூல ஸ்னாத்துக்கு முன்னர் அந்த கோவிலின் உட்புறத்தில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை அந்த தெய்வங்களை சாந்த சொரூபிணியாக மாற்றியுள்ளார்.ஒற்றைகாலில் நின்றபடி அம்பிகை தவம் செய்யும் மாங்காடு தலத்திலும்  அர்த்த மேருஅமைப்பில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்ய பட்டு வழிபாடுகள் நடந்தது வருகின்றன. 

ஓம்காரம்

 

ஓம் என்ற சொல் தமிழில் பிரணவ மந்திரமாக குறிக்கபடுகிறது. ஓம் அக்னிமீளே புரோஹிதம், என்று தொடங்கி ,இறுதியில் ஹரி: ஓம் என்று ரிக் வேதமானது, ஓம்காரத்தில்  தொடங்கி ஓம் கராத்திலேயே நிறைவடைகிறது.அதாவது, ஆரம்பமும்,முடிவும் ஓம்காரமாக அமைந்து  உலக இயக்கம் யாவும் வட்ட வடிவி இயங்கி வருகின்றன. நமது உடல் இயக்க அதிர்வுகள் அனைத்தும் ஒரு புள்ளியில் தொடங்கி,ஒரு வட்ட மடித்து மீண்டும் அதே புள்ளியில் வந்து  முடிகின்றன. ஓம்கார சின்னம் வரி வடிவம் மற்றும் சப்த வடிவம் ஆகியவற்றில் உலக இயக்கத்தோடு ஒன்றுபட்ட நிலையை உண்டாக்கக் கூடியதாகும்.

 கலசம்

மண்ணால் ஆன அல்லது செம்பு,பித்தளை,தாமிரம் போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட,நீர் நீறைந்த பாத்திரத்தின் மேல் தேங்காய் வைத்து அதில் மாவிலைகள் செருகி வைக்கப்படும் அமைப்பு கலசம் எனப்படுகிறது.  இந்த கலசத்தின் உள்ளே  புனித  நதிகளின் நீராகவும்,வாசனை திரவியங்கள் கலக்கப்படுகிறது.  வெண்மை அல்லது சிவப்பு நிறமுள்ள நூல் ,மேல் இருந்து கிழாக நுணுக்கமாக சுற்றப்படும்.அதற்கு மஞ்சள் குங்குமும் வைத்து சகல அலங்கார அமைப்புடன் உள்ள பாத்திரம் பூரண கும்பம்   என்று அழைக்கப்படுகிறது. 

 இதைகிரகப்பிரவேசம்,திருமணம்,தினசரி பூஜை கோவில்களின் கும்பாபிஷேகம் மற்றும் இதர ஹோம பூஜைகளுக்கும் இந்த கும்ப அமைப்பு முக்கியமான ஓன்றாக இருக்கும்.  பூரண கலசமானது உயிருள்ள ஒரு  தேவைதையின் வடிவமாக கருதப்படுகிறது.

 



Leave a Comment