படிப்பில் சிறக்க பிரம்மன் கோவிலுக்கு வாங்க!
கும்பகோணத்தில் உள்ள வேதநாராயணப் பெருமாள் கோயிலில் சரஸ்வதி பிரம்மனுடன் அருள்புரிகிறாள்.படிப்பில் சிறந்து விளங்க இத்தலம் ஏற்றது. மகா விஷ்ணு இங்கு பிரம்மாவுக்கு காட்சியளித்து விமோசனம் அளித்தார்.அவர் வேதநாராயண பெருமாளாக இங்கு கோவில் கொண்டிருக்கிறார்.
பிரளய வெள்ளத்தில் பூலோகமே அழிய கும்பகோணம் மட்டும் அழியாமல் இருந்தது. இதன் சிறப்பு அம்சமாகும். சிறப்பு மிக்க இங்கு யாகம் நடத்த பிரம்மா,தன் துணைவியரான சரஸ்வதி ,காயத்ரியுடன் வந்தார். பிரம்மாவுக்கு நான்கு தலையும் ,காயத்ரிக்கு ஐந்து தலையும் இருந்தது. கணவரை விட மனைவிக்கு அதிக தலைகள் இருந்ததால் யாகத்தில் நெருப்பு எழவில்லை.இதை அறிந்த சரஸ்வதி தன் மந்திர சக்தியால் காயத்ரியை பார்க்க ,ஐந்தாவது தலை மறைந்தது.அதன் பின் குண்டத்தில் நெருப்பு பற்ற யாகம் நடந்தது.
இறுதியில் தேவியருடன் தோன்றிய விஷ்ணு,சபா விமோசனம் கொடுத்து பிரம்மனுக்கு வேதங்களை கற்றுக் கொடுத்தார். ஒரு சன்னதியில் சரஸ்வதி ,காயத்ரியுடன் நின்ற கோலத்தில் பிரம்மா வீற்றிருக்கிறார். அடுத்துள்ள சன்னதியில் ஸ்ரீ தேவி,பூதேவியுடன் அமர்ந்த கோலத்தில் வேத நாராயணார் அருள்பாலிக்கிறார். பிரம்மாவுக்கு எதிரில் உள்ள சன்னதியில் யோக நரசிம்மர் தாயார்களுடன் காட்சியளிக்கிறார்.
ஒரே இடத்தில் மூன்று தெய்வங்களை தரிசிப்பது சிறப்பு ஆகும். இங்கு வேதவல்லித்தாயார்,ஆண்டாளுக்கும் இங்கு சன்னதி உள்ளன.சரஸ்வதி பூஜையன்று காயத்ரி முக்குத்தியுடன் காட்சி தருகிறாள். இதை சுமங்கலி பெண்கள் தரிசித்தால் மங்கல்ய பலம் உண்டாகும். கல்வியில் சிறக்கவும்,தொழிலில் வளர்ச்சி பெறவும் பிரம்ம சங்கல்ப பூஜை நடத்துகின்றனர். கேது தோஷம் நீங்க இத்தலத்தில் இருக்கும் பிரம்மவை வணங்கினால் தோஷம் விலகும் என்பது ஐதிகம்.
Leave a Comment