மார்கழி முதல் நாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடு


இந்துக்களின் புண்ணிய மாதமாக தமிழ் மாதங்களில் கொண்டாடப்படும் மார்கழி முதல் நாளை முன்னிட்டு வாலாஜாபேட்டை உள்ள அனைத்து ஆலயங்களில் பெண்கள் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு செய்தனர்

தமிழ் மாதங்களில் ஒன்பதாவது ஆக வரும் மார்கழி மாதம் இந்துக்களின் நம்பிக்கை ஏற்படுத்திடும் புண்ணிய மாதமாகும் இந்த மாதம் முதல் நாளில் அனைத்து நாட்களுமே இறைவழிபாடு நாளாகும்  அத்தகைய இந்த மார்கழி மாதத்தில் கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்க வேண்டியும் திருமணமானவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி செல்வ வளம் பெருகிட இந்துக்களின் ஐதீகமாக அதிகாலையில் பெண்கள் அனைவரும் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு வாசலில் கோலமிட்டு சாணில் பூசணி இலை பூ மலர்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து விளக்கு ஏற்றிய பின்னர் கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவார்கள்  

அத்தகைய புண்ணிய மாதமான மார்கழி முதல் நாளை முன்னிட்டு  வாலாஜாபேட்டை அணைக்கட்டு உள்ள சுந்தர விநாயகர் ஆலயம் மற்றும் வி.சி.மோட்டூர் பகுதியில் உள்ள பிடாரி அம்மன் ஆலயங்களில் அதிகாலை முதலே சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெண்கள் ஆண்கள் குழந்தைகள்‌ என அனைவரும் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து இறைவனை வழிபாடு செய்தனர்.



Leave a Comment