விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா...


வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா விமர்சையாக நடைபெற்றது.

இந்த கோயிலில் திருமணமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி, திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் ஆகவேண்டும் என்று இந்த கோயில் சிம்மக் குளத்தில் குளிப்பது ஐதீகம். ஆண்கள் தங்களுடைய கஷ்டங்களைப் போக்க மார்க்கவந்தீஸ்வரர் கோயில் சன்னிதானத்தை நூறு தடவை சுற்றி வருவது வழக்கம்.

நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளம் திறப்புக்கு பின்னர். குழந்தை பேறு இல்லாதவர்கள் கோவிலில் உள்ள சிம்ம குளத்தில் நீராடி இறைவனை வேண்டினால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். நள்ளிரவு முதல் பக்தர்கள் வெள்ளத்தால் கோயில் நிரம்பியது. சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் சுவாமியை ஆண்டுதோறும் தரிசிப்பது வழக்கம் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் சொற்பொழிவு கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.



Leave a Comment