மங்கலத்தை தரும் மஞ்சளின் சிறப்பு!


 

திருமணப் பொருட்கள் வாங்கும் வரிசையில் முதல் இடம் பெறுவது மஞ்சள் தான்.அது ஒரு மங்கல பொருளாகப் கருதப்படுகிறது. நாம் எந்த ஒரு பூஜை செய்தாலும் மஞ்சள் பிள்ளையாரை  வைத்து மலரும்,குங்குமுமம் வைத்து பூஜை செய்வது தான் வழக்கம். இலையில் விழுந்தால் அரிசி,தலையில் விழுந்தால் அட்சதை. அட்சதை முனை முறியாத அரிசியில் மஞ்சள் தடவித் தூவுவது ஆகும். பெண்கள்  முகத்திற்கு மஞ்சள் பூசிக் குளிப்பது வழக்கம்.

சுமங்கலி பெண்கள் விட்டிற்கு வந்தால் வெற்றிலை, பாக்கு, குங்குமத்தோடு மஞ்சளும் கொடுப்பார்கள். இதை செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் விலகுவதாக நம்பிக்கை. விரத காலங்களில் மஞ்சள் ஆடை அணிந்தால் குடும்பத்தில் மங்கலங்கள் நடைபெறும்.நீண்ட ஆயுளும் ஐஸ்வர்யமும்,ஆரோக்கியமும் பெற மஞ்சள்  வண்ணத்தை பார்க்கும் பொருட்களில் உபயோகப்படுத்துவது வழக்கம்.

திருமணத்தில் மங்கள சூத்திரமாய், அட்சதையாய், கங்கணமாய் நன்னாட்களில் வாசல் முற்றங்களில் குங்குமத்துடன் பூசப்பட்ட கலவையாய், பொங்கல் பானைகளில் சுற்றிக் கட்டப்பட்டது மஞ்சள். தடைகளைத் தகர்க்கும் விநாயகனை மஞ்சளில் பிடித்து வழிபடுவதும் மங்களத்தைக் குறிக்கும். இப்படி, ஒவ்வொரு நிகழ்விலும் நீக்கமற நிறைந்த மஞ்சள், மங்களத்திற்கு அடையாளமாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு பெண்ணும் மங்களத்தின் சின்னமாய் புருவ மத்தியிலும், மணமானோர் நெற்றி வகிடிலும் குங்குமத் திலகம் இடுவது வெறும் சடங்கோ, அழகுக்கோ மட்டும் அல்ல. பொருள் உலகின் நன்மைகளை அடைய நம் உடல், மன கட்டமைப்பிற்கு இது உறுதுணையாக இருக்கின்றது. மஞ்சளோடு, சிறிது சுண்ணாம்பு, கற்பூரம் கலந்து தயாரிக்கப்படுவதே குங்குமம். “குடும்பத்தின் ஆண் முக்தி நோக்கம் கொண்டு விபூதி இடுவதும், பெண் பொருள் உலக நன்மைக்காக குங்குமம் இடுவதும் வாழ்வில் சமநிலை நிலவ உதவும் சிறு உபாயம்,” என்பது சத்குருநாதர் வாக்கு.

மங்கலத்தை அறிவிக்கும் நிறம்.புத்தாடை அணியும் பொழுது மஞ்சள் தடவி அணிந்தால் ஆடை,அணிகலன்கள் சேரும் என்பது நம்பிக்கை.  உணவில் நறுமணமூட்டி, நிறமூட்டி, சுவையூட்டி, உட்கொள்ளும் மருந்து, வெளிப்பூச்சு மருந்து, அழகு சாதனப் பொருள், மங்கள நிகழ்வுகளில் முக்கிய பங்கு, ஆன்மீக வாழ்வின் இன்றியமையா அம்சமாக திகழ்கிறது மஞ்சள்.



Leave a Comment