மார்கழி பெளர்ணமியில் என்ன செய்ய வேண்டும்?


நல்ல கணவன் கிடைக்க வேண்டும், கணவன் தீர்க்காயுளுடன் இருக்க வேண்டும் என விரதம் தொடங்க நினைக்கும் பெண்கள் காலையில், பல் துலக்கி, முகம், கை கால் கழுவி பின்னர், சுவாமி முன் மஞ்சள்,சீகக்காய், நல்லெண்ணெய் வைத்து வணங்க வேண்டும்.

அதன் பின்னர் எண்ணெய் தேய்த்து சீகக்காய் வைத்து குளிக்க, மஞ்சள் தேய்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் இப்படி குளிப்பது நல்லது. குளித்த பின் இறைவனை வழிபட தீபம் ஏற்றி வழிபட்டு, திருமணமான பெண்கள் மஞ்சள் சரடு மாற்ற வேண்டும். திருமணமாகாத பெண்கள் மஞ்சள் கயிறை நோன்பு கயிறாகக் கட்டிக் கொள்ளலாம்.

மஞ்சள் சரடு மாற்ற இந்த நாள் இப்படி இருக்கே என பார்க்க வேண்டாம். இந்த நாளில் ராகு காலம், எமகண்டம், குளிகை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் திருவாதிரை நட்சத்திரம் உள்ள தினம் முழுவதும் மாற்றிக்கொள்ளலாம். திருமணமான பெண்கள் இந்த திருவாதிரை நோன்பு எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.

திருவாதிரை சிறப்பு

தாருக வனத்து மகரிஷிகள் சிவபெருமானை அழிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வேள்விகள் செய்து பல விஷயங்களை சிவபெருமான் மீது ஏவினர். அதில் முயலகன், அக்னி, மான், உடுக்கை, யானை, தீப்பிழம்பு என பலவற்றை ஏவினர். ஆனால் அனைத்தையும் இறைவன் அடக்கி தன் ஆபரணமாக அணிந்து கொண்டு ஆனந்த நடனம் ஆடினார்.

இந்த மார்கழி மாதத்தில் அம்பிகைக்கும் வெண்ணிற ஆடையை சாற்றி, ஒற்றைப்பட எண்ணிக்கையில் நவரத்தின கற்கள் பதித்த ஆபரணங்களை அம்மனுக்கு அணிவிக்க வேண்டும். தாமரைப் பூவால் அர்ச்சனை செய்தலும், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும் மிகவும் சிறப்பான பலனை தரும். அம்பிகைக்குக் களி நைவேத்தியமாகப் படைப்பது விசேஷம்.

 



Leave a Comment