தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம்....
கார்த்திகை சோமவாரத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரமான இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில், பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. மேலும், இதே நாளில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு மஞ்சள், பால், திரவிய பொடி உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது.
சோமவார தினத்தில், பிரதோஷ வைபவம் என்பதால், அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
Leave a Comment