பெருமுக்கல் சிவன் கோவிலில் 108 சங்காபிஷேகம்
பெருமுக்கல் சிவன் கோவிலில் மூன்றாவது சோமவாரம் முன்னிட்டு 108 சங்காபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தில் மலை உட்சியில் அமைந்துள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற முதலாம் குலத்துங்க மன்னன் கட்டிய ஶ்ரீ முக்தியாஜல ஈஷ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கார்த்திகை மாத விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் மூன்றாவது சோமவாரம் விழாவை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது முன்னதாக நவதானியங்கள் மற்றும் பழவகைகள் கொண்டு அக்னி குண்டத்தில் யாகம் வளர்க்கப்பட்டது.
Leave a Comment