நெடும்பலம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா...


நெடும்பலம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட நெடும்பலத்தில் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது .இந்த ஆலயத்தில் குடமுழுக்கு விழா கடந்த நவம்பர் 30ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது.அதனை தொடர்ந்து வாஸ்து சாந்தி பிரவேசப்பள்ளி போன்றவை நடைபெற்றது.

மேலும் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி முதல் கால யாக பூஜை தொடங்கி அதனைத் தொடர்ந்து முதற்கால பூர்ணாஹதி நடைபெற்றது.தொடர்ந்து மூன்றாம் தேதி இரண்டாம் கால யாக பூஜை இரண்டாம் கால பூர்ணாஹதி தீபாரதனை நடைபெற்றது.

இதனையடுத்து காலை ஏழு மணிக்கு மங்கள இசை கோ பூஜை நான்காம் கால யாக பூஜைகள் ஆகியவை நடைபெற்று முடிந்து மணிக்கு நான்காம் கால மகா பூர்ணாகதி தீபாரதனை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து கடப் புறப்பாடு நடைபெற்றது.புனித கடங்களை வேத விற்பன்னர்கள் தலையில் சுமந்தபடி ஆலயத்தை சுற்றி வந்தனர்.கடப் புறப்பாடு நடைபெற்ற போது சுற்றி இருந்த பக்தர்கள் பொறி மற்றும் மலர்களை தூவி புனித கடங்களை வரவேற்றனர்.

இறுதியாக விமான மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.புனித கடங்களில் கொண்டுவரப்பட்ட நீரை வேத விற்பன்னர்கள் கலசத்தில் ஊற்றினர்.மேலும் அந்த புனித நீரை சுற்றி இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது தெளித்தனர். அதனைத் தொடர்ந்து கலசத்திற்கு மகாதீபாரதணை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



Leave a Comment