சுவாமிமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்....
முருகக் கடவுளின் நான்காம் படைவீடான கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தினமான டிசம்பர் 06ம் தேதி செவ்வாய்கிழமை காலை தேரோட்டமும், இரவு கார்த்திகை தீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறுகிறது. கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாகும், இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை பெருவிழா 12 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் .
கார்த்திகை தீப திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது .இவ்விழாவின் முக்கிய நிகழ்வான வரும் 6ம் தேதி காலை தேரோட்டமும், அன்று இரவு சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்வும் நடைபெற உள்ளது.
Leave a Comment