திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்...
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இன்று தொடங்கி வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநில மற்றும் வெளிநாட்டு 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருளினர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரம், முழங்க பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட கோவிலில் உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இந்த கொடியேற்ற விழாவில் தமிழக துணை சபாநாயகர் பிச்சாண்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,இணை ஆணையார் அசோக்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனை தொடந்து 10 நாட்கள் காலையின் விநாயகர்,சந்திரசேகரர் மற்றும் இரவில் பஞ்சமூர்த்திகளின் மாடவீதியுலா நடைபெறும்.டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலையில் கோயிலின் கருவரையின் முன்பாக பரணி தீபமும்,மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படஉள்ளது.
Leave a Comment