கிருகாம்பிகை சமேத கௌதம ஈஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷம்
ராணிப்பேட்டை அருகே பாலாற்றங்கரை கரையோரம் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த கௌதம முனிவரால் வழிபட்ட ஸ்தலத்தில் கார்த்திகை மாதம் சோமவார பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை அடுத்த காரை பாலாற்றங்கரை ஓரம் அமைந்துள்ள கௌதம முனிவரால் வழிபட்ட ஸ்தலமான கிருகாம்பிகை சமேத கௌதமி ஈஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பிரதோஷ நாளில் கோவிலில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு மஞ்சள் குங்குமம், தயிர், இளநீர் தேன், பன்னீர், பால் மற்றும் சொர்ண அபிஷேகம் ஆகிய திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பூ மலர்களால் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்த பின்னர் மஹா தீபாரதனை கட்டப்பட்டது.
மேலும் பூ மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை கோவிலில் இருந்த பக்தர்கள் அனைவரும் தோளில் சுமந்தவாறு கோவில் முழுவதும் பக்தி பாடல்களை பாடியபடி வலம் வந்து பிரதோஷ உற்சவநாதரை பக்தி பரவசத்துடன் நமச்சிவாய நமச்சிவாய என வணங்கிச் சென்றனர் பின்னர் கருவறையிலிருந்து கௌதம ஈஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Leave a Comment