கந்தனும், கார்த்திகையும்....


சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை.....
சுப்ரமணியருக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை....

முருகனுக்கு உகந்த மாதம் கார்த்திகை மாதம். கார்த்திகை மாதத்தில் கந்தவேலன் மீது நம்பிக்கை வைத்தால் பார்த்த இடங்களில் எல்லாம் பாராட்டும், புகழும் கூடும். நிம்மதியோடு இருக்க, சூழ்ச்சிகளிலிருந்து விடுபட சுப்ரமணியரை வழிபட வேண்டிய மாதம் கார்த்திகை. முருகப்பெருமானை துதித்து வழிபட உகந்த நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரமாகும்.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒரு மிகப்பெரிய பெருமை உண்டு. ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகையைத்தான் ‘திருக்கார்த்திகை’ என்றும், ‘பெரிய கார்த்திகை’ என்றும் அழைக்கின்றோம்.

சிறப்பான ஸ்தலங்கள் அமைந்த ஊர்களின் பெயர்களுக்கு ‘திரு’ என்ற அடைமொழி சேர்ந்திருப்பது போல நட்சத்திரத்திற்கு ‘திரு’ என்று சேர்த்துக் கொண்டாடுவது கார்த்திகை மாதம் மட்டும்தான். ஐப்பசி மாதக் கந்த சஷ்டியில் சூரனை வெற்றி கொண்ட வேலன் வெற்றிக்களிப்போடு இருக்கும் மாதம் இது.

 



Leave a Comment