திருப்பரசுந்தரி சமேத தேவேந்திரர் ஈஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்...


ராணிப்பேட்டை அடுத்த பிஞ்சி திருப்பரசுந்தரி சமேத தேவேந்திரர் ஈஸ்வரர் ஆலயத்தில் 110 கிலோ எடையிலான  அன்னாபிஷே விழாவில்  500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நமச்சிவாய,நமச்சிவாய என்று முழக்கமிட்டனர்.

ஆண்டுதோறும் ஐப்பசி மாதம்  பௌர்ணமி நாளன்று தமிழகத்தில் உள்ள அனைத்து  சிவன் ஆலயங்களில்  அன்னாபிஷேகம் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் பிஞ்சி ஊரில் மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான திருபுராசுந்தரி சமேத தேவேந்திரர் ஈஸ்வரர் ஆலயத்தில் திருப்பூரசுந்தரி அம்பாளுக்கு 30 கிலோ எடை கொண்ட காய்கறிகள் தேவேந்திர ஈஸ்வரர் 80 கிலோ எடை கொண்ட வெள்ளை சாதனங்களை கொண்டு சிறப்பான முறையில் அன்னாபிஷேக  அலங்காரம் செய்து வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓதியபடி  தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது தொடர்ந்து இந்த  அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவனை தரிசனம் செய்தால்  ஆண்டு முழுவதும் உணவுக்குக் குறையிருக்காது என்பது ஐதீகம் இந்த அன்னம் அபிஷேக பெருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமானபக்தர்கள் கலந்து நமசிவாய, நமசிவாய சிவாய நம சிவாய நம  என கோஷங்களை எழுப்பிவாரு பக்தி பரவசத்துடன் வழிபட்டு செய்தனர்.



Leave a Comment