தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்...
தமிழர்களின் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் ஐராவதீஸ்வரருக்கு 108 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தாலும், 100 கிலோ காய்கறிகளாலும் ,51 கிலோ மலர்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
ஐப்பசி மாதம் முழு நிலவு தினத்தன்று சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நாளைய தினம் முழு நிலவு தினம். அன்றைய தினம் சந்திர கிரகணம் நடைபெற உள்ளதால், நாளை மாலை நடை அடைக்கப்படும்.
அதனால் இரவு தாராசுரம் ஐராவதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. 108 கிலோ அரிசியால் வடிக்கப்பட்ட சாதத்தாலும், 100 கிலோ காய்கறிகளாலும், 51 கிலோ வண்ண வண்ண மலர்களாலும் மூலவர் ஐராவதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாரதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment