வினாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்...
தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டியில் வினாயகர் மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம். பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிட்டம்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, அம்மனுக்கு முகூர்த்த கால் நடுதல், முலைப்பாரி போடுதல்,மகா கணபதி யாகம் ,புண்ணிய தீர்த்தம் ,பம்பை மேளம் முழுங்க சிறப்பு அபிஷேக பூஜை , வாஸ்து சாந்தி பூஜை , கும்ப அலங்காரம்,யாகசாலை பூஜை, அம்மனுக்கு முதல் கால பூஜை, துவர பூஜை, வேதிகார்ச்சனை ,முதல் கால யாக பூஜை, சிலைகள் பிரிதிஷ்டை, இடர்களை தீர்க்கும் நாயகிக்கு இரண்டாம் கால பூஜை ஆகிய பூஜைகள் செய்யப்பட்டது.
பிரம்மஸ்ரீ ஸ்ரீ வித்யா உபாசகர் கார்த்திகேயன் ஆச்சாரியார் மற்றும் சுகவனேஷ்வரன் சிவம் ஆச்சாரியார் இந்த சிறப்பு பூஜைகளை செய்தனர் .முதல் நாளன்று புதூர் மாரியம்மன் கோவிலிருந்து பெண்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக எடுத்து வந்து வழிப்பட்டனர்.பின்னர் கிட்டம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆகிய திருக்கோயிலுக்கு பரிவார தெய்வங்களுக்கு புணராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவினை விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Leave a Comment