ஸ்ரீ உண்ணாமுலையம்மன் உடனுறை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்


ஆற்காடு செய்யார் சாலையில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ உண்ணாமுலையம்மன் உடனுறை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு  கும்பாபிஷேகம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு செய்யார் சாலையில் அமைந்துள்ள மிகவும் பழமைவாய்ந்த ஸ்ரீ உண்ணாமுலையம்மன் உடனுறை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு  மஹா  கும்பாபிஷேகம் பெருவிழா இன்று  நடைபெற்றது.

முன்னதாக நேற்று இரவு வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓத அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை ,கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து  சாந்தி ஹோமம் உள்ளிட்டவை  யாகசாலையில் நடைபெற்றது இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, யஜமானர்கள் சங்கல்பம் பூர்ணாஹீதி யாகம் உள்ளிட்டவை யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜை செய்த 72 கலசங்கள்  புறப்பட்டு கோயிலை  வலம் வந்து கோபுர கலசத்தின் மீது வைத்து. விமான கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்து பின்னர் திருக்குட நன்னீராட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் மீது  தெளிக்கப்பட்டது. அந்த புனித நீரை கொண்டு வந்து மூலவர் சன்னதியில் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்த கும்பாபிசேகம் விழாவில் ஆற்காடு மற்றும்  பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். மகா கும்பாபிஷேக வருகை தந்த பக்தர்கள்  அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.



Leave a Comment