விநாயகர் திரு உருவங்களும் அதற்குரிய ஸ்லோகங்களும்
வர கணபதி
ஸிந்தூராபம் இபாநநம் த்ரிநயநம்
ஹஸ்தே ச பாஸங்குஸௌ
பிப்ராணம் மதுமத் கபாலம் அநிஸம்
ஸாத்விந்து மௌலிம் பஜே
புஷ்ட்யாஸ்லிஷ்டதநும் த்வஜாக்ர கரயா
பத்மோல்லஸத்தஸ்தயா
தத்யோந்யாஹித பாணிமாத்தவ வஸூமத்
பாத்ரோலஸத் புஷ்கரம்
செந்நிறத் திருமேனி, மூன்று கண்கள், பாசம், அங்குசம், தேன் கிண்ணம், கொடி உள்ள நான்கு கரங்கள், ஆகியவற்றுடன், சந்த்ரனைத் திருமுடியில் தரித்த வர கணபதியைத் துதிக்கிறேன். அவர் கொடியோடு கூடிய தாமரை உள்ள கரத்தால், தம் தேவியானவளைத் தழுவி நிற்பவர். செல்வம் நிரம்பிய மின்னலென ஒளிரும் பாத்திரத்தைத் துதிக்கையில் ஏந்தியவர்.
த்ரயாக்ஷர கணபதி
கஜேந்த்ரவதநம் ஸாக்ஷாச் சலாகர்ண ஸூசாமரம்
ஹேமவர்ணம் சதுர்பாஹூம் பாஸாங்குஸதரம் வரம்
ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் கதா
புஷ்கரே மோதகஞ்சைவ தாரயந்தம் அநுஸ்மரேத்
யானை முகத்துடன், அசையும் காதுகளில் சாமரம் என்னும் அணிகள் மின்னும் பொன்னிற மேனியை உடையவரும், நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தரித்தவரும், துதிக்கையில் மோதகம் தாங்கியருளுபவருமான த்ர்யாக்ஷர கணபதியைத் துதிக்கிறேன்.
க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி
த்ருதபாஸாங்குச கல்பலதாஸ் வரதஸ்ச பீஜபூரயுத:
ஸஸிஸகல கலிதமௌளி: த்ரிலோசநோருணஸ்ச கஜவதந:
பாஸூர பூஷணதீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்டரோல்லஸித:
விக்நபயோதரபவந: கரத்ருத கமலஸ்ஸதாஸ்து பூத்யை
பாசம், அங்குசம், கற்பகக் கொடி, வரத முத்திரை, தாமரை, தர்ப்பை தாங்கிய ஆறு திருக்கரங்களுடன், துதிக்கையில் மாதுளையைத் தரித்தவரும்,, சந்த்ரன் ஒளி வீசும் திருமுடி(மௌலி)யுடன் கூடியவரும் , முக்கண்ணரும், சிவந்த மேனியரும், ஆனை முகத்தவரும், ஒளிரும் ஆபரணங்கள் இலங்கும் பெருவயிறு உடையவரும், பத்மாசனத்தில் இருப்பவரும், மேகத்தைத் தாக்கும் காற்றைப் போன்றவரும், தாமரையைக் கையில் தரித்தவரும், (பிரார்த்தித்த) உடனே வந்து செல்வங்களருளும் க்ஷிப்ர ப்ரஸாத கணபதியைத் துதிக்கிறேன்.
உத்தண்ட கணபதி
கல்ஹாராம்புஜ பீஜபூரக கதா
தந்தேக்ஷூ பாணைஸ்ஸதா
பிப்ராணோமணி கும்பஸாலி கலஸோ
பாஸஞ்ச சக்ராந்விதம்
கௌராங்க்யா ருசிராரவிந்த கரயா
தேவ்யாஸ் ஸதாஸம்யுத:
ஸோணாங்கஸ் ஸூபமாதநோது பஜதாம்
உத்தண்ட விக்நேஸ்வர:
நீலோத்பலம், தாமரை, மாதுளை, கதை, தந்தம், கரும்பு, வில், நெற்கதிர், கலசம், பாசம், அம்பு ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், கைகளில், தாமரை மலரைத் தாங்கி நிற்கும் பச்சை வண்ண தேவியுடன் எப்போதும் இருப்பவரும், மங்களங்கள் அருளுபவருமான உத்தண்ட கணபதியைத் துதிக்கிறேன்.
திரிமுக கணபதி
ஸ்ரீமத்தீக்ஷ்ண ஸிகாங்குஸாக்ஷவரதாம்
தக்ஷே ததாந: கரை:
பாஸாம்ருத பூர்ணகும்ப-மபயம்
வாமே ததாநோ முதா
பீடே ஸ்வர்ணமயாரவிந்த விலஸத்
ஸத்கர்ணிகா பாஸூரே
ஆஸீநஸ்த்ரிமுக: பலாஸருசிரோ
நாகாநந: பாதுந:
கூர்மையான அங்குசம், அக்கமாலை, வரதமுத்திரை ஆகியவை மூன்று வலக்கரங்களில் ஒளிவீச, பாசம், அமுத கலசம், அபயம் இடக்கரங்களில் மின்ன, அழகான கர்ணிகையுடன் ஒளி வீசும் தங்க மயமான தாமரைப்பீடத்துடன் கூடியவரான, செந்நிறத் திருமேனியும், மூன்று முகங்களும் உடையவரான மும்முக கணபதி என்னைக் காப்பாற்றுவராக.
ஸிம்ஹ கணபதி
வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம்
தக்ஷே விதத்தே கரை:
வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம்
ஸந்மஞ்ஜரீ சாபயம்
ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந:
ஸங்கேந்துகௌர: ஸூப:
தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி:
பாயாதபாயாத் ஸந:
வீணை, கற்பகக்கொடி, ஸிம்ஹம், வரதம் ஆகியவை வலக்கரங்களிலும், தாமரை, ரத்ந கலசம், மலர்க்கொத்து, அபய முத்திரை ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, தடி போன்ற துதிக்கையுடன் விளங்குகின்ற ம்ருகேந்த்ர முகம் கொண்ட, சங்கு போன்ற (வெண்ணிறமுடைய) சந்த்ரனைத் தரித்த, உயர்வான ரத்நம் போன்ற ப்ரகாசமான ஆடையை அணிந்தவரான ஸிம்ஹ கணபதியை முறையோடு எப்போதும் துதிக்கிறேன்.
துர்கா கணபதி
தப்தகாஞ்சந ஸங்காஸஸ்ச
அஷ்டஹஸ்தோ மஹத்தநு:
தீப்தாங்குஸம் ஸரஞ்சாக்ஷம்
தந்தம் தக்ஷேவஹந் கரை:
வாமே பாஸம் கார்முகஞ்சலதாம்
ஜம்பூத்யதத் கரை:
ரக்தாம்ஸூகஸ்ஸதா பூயாத்
துர்கா கணபதிர் முதே
உருக்கிய பொன் போன்ற திருமேனியும், எட்டு திருக்கரங்களுடன் பெரிய உருவமும் கொண்டு, ஜ்வலிக்கின்ற அங்குசத்தையும், அம்பு, அக்ஷமாலை, தந்தம் ஆகியவற்றை வலக்கரங்களிலும், பாசம், வளைந்த வில், கற்பகக் கொடி, நாவற்பழம் ஆகியவற்றை இடக்கரங்களிலும் ஏந்திய செந்நிற ஆடை உடுத்தியுள்ள துர்கா கணபதியைத் துதிக்கிறேன்.
ஸங்கடஹர கணபதி
பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே
லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்ந ஸோபாட்யாம்
தக்ஷேSங்குஸ வரதாநம் வாமே பாஸஞ்ச பாயஸ பாத்ரம்
நீலாம்ஸூகலஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்
ஸங்கடஹரண: பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்
பால சூர்யன் போன்ற நிறத்துடன் கூடியவராக, நீல மலரைத் தாங்கியுள்ள பச்சை மேனியளான தேவி இடது தொடையில் அமர்ந்திருக்க, வரதம், அங்குசம் ஆகியவை வலக்கரங்களிலும், பாசம், பாயஸ பாத்ரம் ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, நீல நிற ஆடை அணிந்து, தாமரைப் பீடத்தில் நின்ற திருக்கோலத்துடன் கூடியவராகக் காட்சி தந்து, ஸங்கடத்தின் போது எல்கள் தொடர்ந்து பெற்றிட நமது ஆன்மீக தகவல்கள் குழுவில் இனையுங்கள் . குழுவில் இனையப்போதும் தோன்றி அருளும் யானைமுகக் கடவுளைத் துதிக்கவும்.
Leave a Comment