இராஜராஜசோழன் 1037ம் ஆண்டு சதயவிழாவை ஒட்டி பந்தல்கால் நடும் விழா...


தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய இராஜராஜசோழன் 1037ம் ஆண்டு சதயவிழாவை ஒட்டி பந்தல்கால் நடும் விழா நடைப்பெற்றது.
 
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜ சோழன 1037 ம் சதயவிழா நவம்பர் மாதம் 2 மற்றும் 3 ஆகிய இரு தினங்கள் நடைபெறுவதை முன்னிட்டு பந்தல்கால் நடப்பட்டது. மங்கள வாதயங்கள் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓத. பந்தல்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப்பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அலங்கார தீபம், மகாதீபம் காட்டப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது. பெருவுடையாருக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு பஞ்சமுக தீபம் காட்டப்பட்டது ஏராளமான பக்தர்கள் பந்தல் கால் நடும் விழாவில் கலந்து கொண்டு பெருவுடையாரை தரிசனம் செய்து சென்றனர்



Leave a Comment