ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவம்


ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

உலக பிரசித்தி பெற்றதும் சக்தி பீடங்களில் முதன்மையானவற்றில் ஒன்றானதுமான  காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி  காமாட்சியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவம் கடந்த 25ந் தேதி முதல்  தொடங்கி வருகின்ற 05ந் தேதி வரை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி  நாள்தோறும் கோவில் உட்புற வளாகத்தில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் எழுந்தருளி சுரஸம்ஹார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹோத்ஸவத்தின் ஆறாம் நாள் விழாவில் கோவில் உற்சவர் சன்னதியில் இருந்து காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்பாள் சிவப்பு வண்ண பட்டு உடுத்தி ஆண்டாள் கொண்டையுடன் கையில் கிளி ஏந்திக்கொண்டும் வைரம்,வைடூரியங்கள் ஜொலி ஜொலிக்க ரோஜா பூ,விலுச்சை பூ,செண்பகப் பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு லட்சுமி,சரஸ்வதியினருடன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு கோவில் உட் பிரகாரத்தில் வலம் வந்து நவராத்திரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.அங்கு அம்பாளுக்கு பல்வேறு வேத பாராயணங்கள் முழங்கியப்பின்  காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மபாள் நரகாசுரனை  சுரஸம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி தத்ரூபமாக வெகு சிறப்பாக நடைபெற்றது.அதன் பிறகு அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் கட்டப்பட்டு  அங்கு கூடியிருந்த திரளான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் பயபக்தியுடன் கண்டுகளித்து காமாட்சியம்பாளை  தரிசித்து சென்றனர்.

மேலும் நவராத்திரி மண்டபத்தில் காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் உற்சவர் தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருள இருபுறங்களிலும்  வைக்கப்பட்டுள்ள ராமாயணம்,மகாபாரதம் இதிகாசங்கள் மற்றும் பல்வேறு புராண கதைகளை நினைவுப்படுத்தும் விதமான கொலு  பொம்மைகளை உள்ளூர் மற்றும் ஆந்திரா,கேரளா,பெங்களூர் போன்ற வெளி மாநில, வெளி மாவட்டத்தை சேர்ந்த  ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் கண்டு கழித்தும்,  காமாட்சியம்பாளை  தரிசித்தும் அம்பாளின் பேரருளை பெற்று சென்றது.

மேலும் இந்த 6-ஆம் நாள் நவராத்திரி விழாவையொட்டி விநாயகர்,சிவபெருமான்,காளி வேடங்கள் போன்ற பல்வேறு வேடங்கள் தரித்து வாத்தியங்கள் முழங்க இதற்கு ஏற்றவாறு கலைஞர்களின் நடனம் அங்கிருந்தோரை கவிர்ந்திழுத்துடன் அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது.



Leave a Comment