ரிஷப ராசிக்கு அக்டோபர் மாதம் பண வரத்து எப்படி இருக்கும்?


ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு(வ) - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:
இம்மாதம் 03ம் தேதி புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 9ம் தேதி செவ்வாய் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 18ம் தேதி சூர்யன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 20ம் தேதி சுக்கிர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
இம்மாதம் 23ம் தேதி புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் பண வரத்து திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களை சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும். கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம்  சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது.  வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும்.  அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது  அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும். வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்கள் வீண்பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான்  தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள்.  மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

மாணவர்கள் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய  சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். தாய் தந்தையருடன் இருந்து வந்த மனத்தாங்கல்கள் நீங்கும். எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும்.

ரோகிணி:
இந்த மாதம் திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு சக கலைஞர்கள் பொறாமை கொள்வார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜை செய்து வழிபட பண தட்டுப்பாடு நீங்கும். குழப்பங்கள் தீரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி;
சந்திராஷ்டம தினங்கள்: 2, 3, 30, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14, 15

-பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

 



Leave a Comment