வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி வெங்கடேச பெருமாள்
ஆற்காட்டில் திருப்பதி போன்று வண்ண விளக்குகளால் வீதி உலா வந்த ஸ்ரீதேவி பூதேவி வெங்கடேச பெருமாள் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் திருமங்கை ஆழ்வார் திருப்பதி திருமலை பிரம்மோற்சவ பாதயாத்திரை குழுவினர்களின் 35-வது ஆண்டு பாதயாத்திரை மற்றும் அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு திருமலை மாட வீதி உலாவானது இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.
இந்த திருமலை மாட வீதி உலாவை முன்னிட்டு முன்னதாக திருக்கல்யாண வைபவம் நித்திய அன்னதானம் ஊஞ்சல் சேவை ஆகியவை நடத்தப்பட்டு இறுதியாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து திருமலை மாட வீதி உலா பாதயாத்திரை திரளான பக்தர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வின் போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் வாகனத்தில் காட்சியளித்தபடி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி வீதி உலா தொடங்கப்பட்டு அந்த வீதி உலாவானது. ஆற்காடு பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் வழியாக பக்தர்கள் பார்வைக்காக கொண்டுவரப்பட்டது.
மேலும் இதில் பல்வேறு சுவாமிகளின் வேடங்கள் இட்டபடி சிறுவர்கள் மற்றும் சிறுமியர் வீதி உலாவின் போது பங்கேற்று இருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது இந்த வீதி உலாவின் போது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாலைகளின் இரு புறங்களிலும் ஏராளமான பக்தர்கள் கூடி நின்று ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ வெங்கடேச பெருமாளை பக்தி பரவசத்துடன் பக்தியோடு வழிபட்டு சென்றனர்.
Leave a Comment