ஹோரை என்றால் என்ன அதன் முக்கியத்துவங்கள் என்னென்ன?
ஹோரை அறிந்து நடப்பவனை ஜெயிப்பது என்பது கடினம் . ஒன்பது கிரகங்களில் ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஹோரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஹோரை கிடையாது.
சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஹோரைகளை கணக்கிட்டுள்ளனர்.
ஹோரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஹோரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஹோரை .
இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஹோரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஹோரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் வரிசைப்படி ஹோரை கணக்கிடப்படும்.
Leave a Comment