ஹயக்ரீவர் தோன்றியது எப்படி தெரியுமா?
நான்கு வேதங்களின் துணை கொண்டு, அந்த வேதங்கள் பின் தொடர்ந்து வர பிரம் மா தனது சிருஷ்டி தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களைப் பிரம் மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்க வேண்டும் என்றஎண்ணத்தால் அந்த வேத ங்களைக் குதிரை வடிவில் வந்து பிரம்மா விடம் இருந்து பறித்துச் சென்றனர்.
வேதங்கள் இல்லாமல் சிருஷ்டியின் அர்த் தமே இல்லையேப உலகை இருள் சூழ்ந்த து பிரம்மா செய்வதறியாது திகைத்தார். மஹா விஷ்ணுவிடம் சென்று முறையிட் டார் பிரம்மா, மஹாவிஷ்ணு இவ்வுலகை க் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அசுரர்கள் எந்தக் குதிரை வடிவில் வந்தன ரோ, அந்தக் குதிரை வடிவிலேயே தாமும் செல்லத் தீர்மானித்தார்.
குதிரை முகம், மனித உடல், ஆயிரம் கோடி சூரியர்களையும் மிஞ்சும் ஒளி, சாட்சாத் அந்த சூரிய, சந்திரர்களே இரு கண்கள், கங்கையும், சரஸ்வதியும் அந்தக் கண்களி ன் இமைகள் சங்கு, சக்கரதாரியாக இந்த திவ்ய சொரூபத்துடனேயே விஷ்ணு வேத ங்களை மீட்டு எடுத்தார். அன்று முதல் விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் ஹயக்ரீவராக உலகில் நிலை பெற்றது.
பகவான், விஷ்ணு பிரளய காலத்தில் உல கையும் மக்களையும் தன்னுள்ளே தாங்கி, ஆலிலை பாலகனாய் பிரளயகால சமுத்தி ரத்தில் யோக நித்திரை செய்து வந்தார். பின் உலகப் படைப்பதற்காக, தன் நாபிக்க மலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்து நான்கு வேதங்களையும் உபதேசித்தார். பிரம்மனும் படைப்புத்தொழிலை ஆரம்பித்தார்.
ஒருமுறை பெருமானின் நாபிக்கமலத்தில் உள்ள ஓர் இதழில் இரண்டு தண்ணீர்த்தி வலைகள் தோன்றி, மது, கைடபன் என்ற அசுரர்களாக மாறினர். இவர்கள் பெருமா ளிடமிருந்து பிறந்த தைரியத்தில், பிரம்ம னிடமிருந்த வேதங்களை அபகரித்து, தாங் களே படைப்புத்தொழில் செய்ய ஆசைப்பட்டனர்.
குதிரை முகம் கொண்டு, பிரம்மனிடமிருந் து வேதத்தைப் பறித்துக்கொண்டு, பாதா ளத்தில் ஒளித்து வைத்தனர். வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரண் அடைந்தார். பெருமாள் வேதங்களை மீட்க பாதாள உலகம், வர அங்கே அசுரர்கள் குதிரை வடிவில் இருப்பதைக் கண்டார். உடனே தானும் குதிரை முகம் கொண்டு அவர்களுடன் போரிட்டு, வேதங்களை மீட்டு பிரம்மனிடம் கொடுத்தார்.
அசுரர்கள் கைப்பட்டதால் தங்களது பெரு மை குன்றியதாக நினைத்த வேதங்கள் புனிதமாக்கும்படி பெருமாளை வேண்டின. குதிரைமுகத்துடன் இருந்த பெருமாள் வேதங்களை உச்சிமுகர்ந்ததால், அந்த மூச்சுக்காற்றில் வேதங்கள் புனிதமடைந் தன. அசுரர்களுடன் போரிட்ட ஹயக்ரீவர் உக்கிரமாக இருந்தார் என்றும், அவரை குளிர்விக்க லட்சுமியை அவர் மடியில் அமர்த்தினார்கள்.
இதனால் அவரை லட்சுமி ஹயக்ரீவர் என் றனர். வேதங்களை மீட்டவர் என்பதால், ஹயக்ரீவரர் கல்வி தெய்வமாகிறார். கல்வி உள்ள இடத்தில் லட்சுமியாகிய செல்வம் சேரும் என்பதால், லட்சுமியை இடது தொடையில் அமர்த்திருக்கிறார்.
Leave a Comment