ஸ்ரீமத் லலிதா மஹா திரிபுரசுந்தரி சமேத திரிபுரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்....


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சாத்தூர் கிராமத்தில் ததீசி மகரிஷியால் பூஜிக்கப்பட்ட லிங்கமாவும் வேண்டுபவர்களுக்கு வரம் அளிக்கும் அன்னையுமான ஸ்ரீமத் லலிதா மஹா திரிபுரசுந்தரி சமேத திரிபுரேஸ்வரர் திருக்கோவிலில் ஜீர்ணோத்தரான, நூதன ராஜகோபுர அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு  விமர்சையாக நடைபெற்றது.

இதில் முன்னதாக நேற்று இரவு வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓத அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்டவை பல்வேறு  ஹோமங்கள் யாகசாலையில் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, யஜமானர்கள் சங்கல்பம் பூர்ணாஹீதி யாகம் உள்ளிட்டவை யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜை செய்த கலசம் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வலம் வந்து கலசத்தின் மீது வைத்து. விமான கோபுர கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காண்பித்த பின்னர் நூதண மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது அதைத்தொடர்ந்து கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீரை கோவில் வளாகத்தின் வெளியே இருந்த பக்தர்கள் மீது  தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் கலசத்தின் மீது ஊற்றப்பட்ட ‌புனித நீரை‌ வேத பண்டிதர்கள் புனித நீரை எடுத்துக் கொண்டு மூலவர் சன்னதியில் இருக்கும் ஸ்ரீமத் லலிதா மஹா திரிபுரசுந்தரி சமேத திரிபுரேஸ்வரர் உள்ள சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக  விழாவில் ஆற்காடு சாத்தூர்,விளாப்பாக்கம் ‌ உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர் பின்னர் மஹா கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த பக்தர்கள்   அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.



Leave a Comment