அய்யனார் ஒய்யவந்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா...


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற   பந்தலுடைய அய்யனார் ஒய்யவந்தாள் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

கொரானோ பரவலுக்கு பின் திருவிழாக்கள் நடைபெற வில்லை. தற்போது தமிழகம் முழுவதும் கோயில்களில் திருவிழாக்கள் நடந்து வருகின்றன. கிராமப்புற கோயில்களில் 12 வருடங்களுக்கு பின் கும்பாபிஷேகம் நடந்து வருகிறது இந்த நிலையில் பூவந்தி கிராமத்தில் உள்ள  பந்தலுடைய அய்யனார் ஒய்யவந்தாள்  அம்மன் கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும்  இன்று காலை  வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடந்தது.

காலை  சிவாச்சார்யார் தலைமையிலான  குழு புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து யாகசாலையை வலம் வந்தனர். பின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகம் முடிந்து தீபாராதனை காட்டப்பட்டது.,  புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பூவந்தி மற்றும் சுற்றுவட்டார கிராமமக்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாமியை வழிபட்டு சென்றனர்.



Leave a Comment