மகர ராசிக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்....?
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்)
கிரகநிலை:
ராசியில் சனி(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ) - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது என கிரகநிலை அமைந்திருக்கிறது.
கிரகமாற்றம்:
01-09-2022 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
25-09-2022 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
பலன்:
பார்த்தால் கடுமையானவர் போல் தோற்றமளிக்கும் ராசியினரே நீங்கள் பழகினால் இனிமையானவர். எதிலும் சரியாக செயல்படுபவர். இந்த மாதம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.
குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்வது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. பணவிஷயத்தில் கூடுமானவரை அடுத்தவரை நம்புவதை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் செல்லும்போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை உருவாகலாம். எச்சரிக்கை தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நன்மை தரும். எதிர்பார்த்த பணம் தாமதப்படலாம்.
பெண்களுக்கு கோபத்தை தவிர்த்து நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும்.
கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.
மாணவர்களுக்கு திட்டமிட்டு பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எதிலும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். மன குழப்பம் நீங்கும். கடன் பிரச்சனை குறையும். பணவரத்து அதிகரிக்கும். மன குழப்பத்தை உண்டாக்கலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது.
திருவோணம்:
இந்த மாதம் காரிய தடைகள் விலகும். பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது.
அவிட்டம் 1,2 பாதங்கள்:
இந்த மாதம் கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மன திருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டு களிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும். குறைகள் நீங்கும். மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும்.
பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;
சந்திராஷ்டம தினங்கள்: செப் 23, 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 16, 17
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
Leave a Comment