விநாயகர் விஜர்சன ஊர்வலம்....


கரூரில் விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலத்தில் 67 விநாயகர் சிலைகள்   ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. இந்துக்களில் முக்கியமான பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, கரூர்  மாவட்டம் முழுவதும் 286  பொது இடங்களில் இந்து முன்னணி, இந்து மகாசபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில்  விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.இதையடுத்து  இன்று விநாயகர் விஜர்சன ஊர்வலம்  நடத்தப்பட்டது கரூர் நகரம், வெங்கமேடு, காந்திகிராமம், தாந்தோன்றிமலை  ஆகிய பகுதியிலிருந்து 37 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கரூர் நகரம் ஐந்து ரோடு வழியாக வாங்கல் கிராமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு  காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.இதேபோல தென்னிலை, பரமத்தி ஆகிய ஊர்களில் இருந்து 30 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தவுட்டுப்பாளையம் பகுதியில்   காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் விஜர்சன ஊர்வலத்தையொட்டி அனைத்து பகுதியிலும் 100 க்கும் மேற்பட்ட போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



Leave a Comment