விநாயகர் சதுர்த்திக்கு முன் கொண்டாடப்படும் கெளரி பூஜை
விநாயகர் சந்துர்த்தி எப்போது கொண்டாடப்பட்டாலும், அதற்கு முந்தைய தினம் கெளரி கொண்டாட்டம் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.நம்மில் பலரும் விநாயகர் சதுர்த்தி தினம் மிக கோலாகலமாக பல்வேறு பலகாரங்களை படைத்து கொண்டாடப்படுகிறது. ஆனால் கர்நாடகாவில் மிக பிரபலமாகவும் (கெளரி ஹப்பா), தமிழ் நாட்டின் சில பகுதிகளிலும் இந்த கெளரி பூஜை கொண்டாடப்படுகின்றது.
கணபதியை உருவாக்கிய பார்வதி கதை:
ஒரு முறை பார்வதி தேவி தான் நீராட செல்லுவதாக கூறி, யாரையும் உள்ளே அனுமதிக்காதே என நந்தியிடம் கூறி காவலுக்கு வைத்து விட்டு சென்றார். அப்போது அங்கு வந்த சிவ பெருமான், உள்ளே செல்ல பார்த்தார். அவரை தடுத்த நந்தி, பார்வதி தேவி யாரையும் உள்ளே அனுமதிக்கக் கூடாது என கூறியுள்ளார் என சொன்னார். நான் பார்வதியின் மணாளன், அதனால் இந்த கட்டளை என்னை தடுக்காது என கூறி உள்ளே சென்றார். உள்ளே சென்ற ஈசன், பார்வதி தேவி அமர்ந்திருப்பதைப் பார்த்தான். நான் யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என நந்தியிடம் கூறி இருந்தேனே என்றார்.
ஆனால் நந்தி என் சேவகன், அவர் எப்படி என்னை தடுக்க முடியும் என கூறினார். இதைக் கேட்ட பார்வதி தேவி, எனக்கென ஒரு மெய் காப்பாளன் வேண்டும் என எண்ணி, தான் பூசும் மஞ்சள், சந்தனத்தால் உருவம் பிடித்து, உயிர் கொடுத்தார். அவரே தற்போது கணபதி என கொண்டாடப்படுகின்றார்.
கெளரி கொண்டாட்டம் ஏன்?
கணபதிக்கு உயிர் கொடுத்த கெளரியை கொண்டாடும் விதமாக இந்த கெளரி கொண்டாடம் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
பூஜை விதிகள் :
திருமணமான பெண்கள் இந்த விரதம் மற்றும் பூஜை செய்வது வழக்கம். மஞ்சள் நிறத்தில் கடைகளில் விற்கப்படும் பார்வதி உருவத்தை வாங்கி ஒரு கலசத்தின் மீது வைத்து வழிபடலாம். அல்லது நாம் மஞ்சளை அரைத்து அதை அம்மன் உருவமாக, தேங்காய் மீது உருவாக்கலாம். அதனை கலசத்தின் மீது வைத்து பூஜை செய்து வழிபடலாம்.
வீட்டில் பூஜை செய்வது எப்படி? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பூஜை விதிகள்
கலசத்தில் மஞ்சள் கலந்த நீர் வைத்து, அதன் மீது மாவிலை வைத்து, அம்மன் உருவம் பிடித்த தேங்காயை அதன் மீது வைத்து, அலங்கரித்து பூஜிக்கலாம். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் குழந்தை செல்வம் இல்லாதவர்களுக்கு, கணபதி போன்ற நல்ல அறிவுச் செல்வம் மிகுந்த குழந்தை பேறு கிடைக்கும்.
Leave a Comment