திருப்பதி கோவிலில் இலவச தரிசனத்திற்கு 20 மணி நேரம்...
கோடை விடுமுறை முடிந்த பின்னரும் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலை மோதும் நிலையில். இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள காரணத்தால் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 64 அறைகளும் நிரம்பி உள்ளன. அங்கு கிடைக்காத பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். இதனால் 20 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையான இலவசமாக வழிபட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் 300 ரூபாய் தரிசனத்திற்காகவும் நான்கு மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது. நேற்று ஒரே நாளில் சுவாமியை 68,128 பக்தர்கள் தரிசித்தனர். 34,021பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.44 கோடி நேற்று ஏழுமலையானுக்கு காணிக்கையாக கிடைத்துள்ளது.
Leave a Comment