திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கொடிப்பட்ட ஊர்வலம் 


உலகப்புகழ்பெற்ற  அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குவதையொட்டி கொடிப்பட்டம் யானை மீது ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறக்கூடிய முக்கிய விழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா நாளை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனையொட்டி இன்று 12-ம் திருவிழா மண்டபத்தில் வைத்து கொடி பட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் யானை தெய்வானை மீது கோவில் அர்ச்சகர் கொடிபட்டத்தினை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கொடிப்பட்டமானது உள் மாடவீதி, வெளிமாட வீதி என 8 - வீதிகளிலும் வீதி உலா வந்து கோவிலைச் சென்றடைகிறது. 

அதனைத்தொடர்ந்து நாளை அதிகாலை 05-30 மணிக்கு மேல் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்குகிறது. தொடர்ந்து 12-நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ம் திருநாள் தேரோட்டம் வரும் 26-ம் தேதியன்று நடைபெறுகிறது.



Leave a Comment