திருப்பதி மலையில் கோவில் திருக்குளத்தை சுத்தம் செய்யும் பணி துவக்கம்
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி மலையில் கோவில் திருக்குளத்தை சுத்தம் செய்யும் பணி துவக்கம். திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் அடுத்த மாதம் 27 ஆம் தேதி துவங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது.
பிரமோட்சவத்தின் நிறைவு நாளன்று கோவில் திருக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இதனை முன்னிட்டு கோவில் திருக்குளத்தை சுத்தம் செய்யும் பணி துவங்கி உள்ளது. இதற்காக ஏழுமலையான் கோவில் அருகில் இருக்கும் சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு அடியில் தேங்கி கிடக்கும் சிறு அளவிலான கழிவுகள் அகற்றப்படுகின்றன. மேலும் திருக்குளத்தை முழுவமாக சுத்தம் செய்து நான்கு புறங்களிலும் வர்ணம் தீட்டிய பின் தண்ணீர் விடப்படும்.
அதன் பின் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்படும். அதுவரை திருக்குளத்தின் மேல் பகுதியில் உள்ள குழாய்களை பயன்படுத்தி பக்தர்கள் புனித நீராடலாம்.
Leave a Comment