ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி தேவிக்கு வளையல்கள் அலங்காரம்


வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 9 அடி உயரமுள்ள ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி தேவிக்கு 21,000 வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம்

வாலாஜாபேட்டை  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உலக மக்களின் நலன் வேண்டியும் அனைத்து மக்களும் ஆடி மாதம் அம்மனின் அருள் பெற்று சகல சௌபாக்யங்களும் பெற வேண்டியும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் .ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் ஆடி 16ம் நாள் 01.08.2022 திங்கள் கிழமை ஆடிப்பூரத்தினை முன்னிட்டு 9 அடி உயரமும் பதினெட்டு திருக்கரங்களுடன் சிரித்த முகத்துடன் எழுந்தருளி அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு துர்கா ஹோமத்துடன் பஞ்ச திரவிய அபிஷேகம் நடைபெற்று 21000 வளையல்களைக் கொண்டு விஷேச அலங்காரம் செய்து திருவிளக்கு பூஜையுடன் குங்கும அர்ச்சனையும் நாக சதுர்த்தியை முன்னிட்டு ராகு-கேது ஹோமமும் நாகராஜர் வழிபாடும் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து ஆடி 17ம் நாள் 02.08.2022 செவ்வாய்க்கிழமை ஆடி பஞ்சமி மற்றும் கருட பஞ்சமியை முன்னிட்டு இயற்கை வளம் பெறவும் விவசாயம் செழிக்கவும் அனைத்து விதமான நன்மைகளையும் பெற வேண்டி ஸ்ரீ பஞ்சமுகி வராகி அம்மனுக்கு பலநூற்றுக் கணக்கான மூலிகைகளைக் கொண்டு வராகி ஹோமமும் குங்கும அபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் கருட ஜெயந்தியை முன்னிட்டு 16.8 அடி உயரமுள்ள ஸ்ரீ விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கு கருட ஹோமத்துடன் 16 வகையான திரவியங்களைக் கொண்டு விஷேச அபிஷேகமும் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
 



Leave a Comment