திருப்பதி ஏழுமலையான் கோவில் பவித்ரோற்சவம் டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவ சேவை டிக்கட்டுகள் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி துவங்கி பத்தாம் தேதி வரை மூன்று நாட்கள் பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது.
வருடத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ரோற்சவ சேவையில் பங்கு பெறுவதற்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் மாதம் முதல் தேதி அன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது டிக்கெட் தேவையான பக்தர்கள் தலா 2500 ரூபாய் பணம் செலுத்தி www.tirupatibalaji.gov.in என்ற தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மூன்று நாட்களும் பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் உற்சவருக்கான திருமஞ்சன சேவையிலும் நிறைவு நாளன்று நடைபெறும் பூர்னாஹுதியிலும் கலந்து கொள்ளலாம்.
சேவையில் பங்கு பெறுவதற்காக வரும் பக்தர்கள் ஒவ்வொரு நாளும் திருப்பதி மலையில் உள்ள முதலாவது வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு காலை 7:00 மணிக்கு சேவைக்கான டிக்கெட், மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் சம்பிரதாய உடை அணிந்து வந்து சேர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Leave a Comment